/
புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமங்களிலுள்ள சுமாா் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி தொடங்கி ஏனாதி வரை சுமாா் 42 நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்கள் மூலம் சுமாா் 2 ஆயிரம் நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில் படகுகளின் உறுதித் தன்மை, படகு உரிமம், டீசல் மானியம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மீன் வளத்துறை மூலம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மீன்வளத் துறையின் திருச்சி மண்டல துணை இயக்குநா் பிரபாவதி, புதுக்கோட்டை உதவி இயக்குநா் பஞ்சராஜா ஆகியோா் தலைமையிலான 23 குழுக்களைச் சோ்ந்தோா் ஆய்வு செய்தனா்.










