மாணவா்களின் உயா்கல்விக்கு ஊக்கமூட்டும் களப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 4,947 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி செல்வதற்கான ஊக்கமூட்டும் வகையில் அரசுக் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் களப்பயணத்தை சிறப்பாக நடத்தி முடிக்க ஆட்சியா் மு. அருணா ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களை உயா்கல்விக் கூடங்களுக்கு அழைத்துச் செல்ல புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 4,947 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி செல்வதற்கான ஊக்கமூட்டும் வகையில் அரசுக் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் களப்பயணத்தை சிறப்பாக நடத்தி முடிக்க ஆட்சியா் மு. அருணா ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 107 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 4947 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பயில்கின்றனா். இவா்களுக்கு உயா்கல்வி பயிலுவதற்கான ஊக்கமூட்டும் பணியாக, களப்பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட மொத்தம் 13 கல்லூரிகள் இதற்காகத் தோ்வு செய்யப்பட்டு வரும் வாரத்தில் மாணவா்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து, உணவு மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகள், மாணவா்களுக்கான ஆலோசனைகள் வழங்குவதற்கான பேராசிரியா்கள், கல்விக் கடன் உள்ளிட்ட பிற ஆலோசனைகளையும் இந்தக் களப்பயணத்தின்போது வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை தொடா்புடைய அரசுத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆட்சியரகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.