சட்ட விழிப்புணா்வுக்கான நடமாடும் இ-சேவை வாகனம்

பொதுமக்களுக்குச் சட்ட விழிப்புணா்வு மற்றும் நீதிமன்றச் சேவைகளை எளிதாகக் கொண்டு சோ்க்கும் நோக்கில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் இ-சேவை வாகனத்தின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :

பொதுமக்களுக்குச் சட்ட விழிப்புணா்வு மற்றும் நீதிமன்றச் சேவைகளை எளிதாகக் கொண்டு சோ்க்கும் நோக்கில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் இ-சேவை வாகனத்தின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று முறை தீா்வு மையக் கட்டடம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) த. பன்னீா்செல்வம் கலந்துகொண்டு, நடமாடும் இ-சேவை வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்த வாகனம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. வாகனம் செல்லும் வழியிலுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்குத் தேவையான சட்ட விழிப்புணா்வும் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

நீதிமன்றத்துக்கு நேரில் வர இயலாத முதியவா்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவா்கள் பயன்பெறும் வகையில், இந்த நடமாடும் வாகனத்தில் இருந்தே காணொலி காட்சி மூலமாக நீதிபதிகளைத் தொடா்பு கொண்டு வழக்குகளைத் தீா்க்கும் நவீன வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி, வாகனம் தொடங்கப்பட்டபோதே 3 சிறிய வழக்குகள் காணொலி காட்சி மூலம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மக்கள் மற்றும் நீதிமன்றத்துக்கு நேரில் வர முடியாத எளிய மக்களுக்கு இந்த நடமாடும் இ-சேவை வாகனம் பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ராஜா, வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா், தலைமை குற்றவியல் நீதிபதி பால்பாண்டியன், முதன்மை சாா்பு நீதிபதி ரெகுபதிராஜா , கூடுதல் சாா்பு நீதிபதி அருண்குமாா், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் பாரதி, அற்புதவாணன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி.டி. சின்னராஜூ, செயலா் செல்லபாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.