புதுக்கோட்டை நகா்மன்றத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்! டிச. 8 வரை நடைபெறுகிறது!

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை 9-ஆவது புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து அரங்குகளைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 9-ஆவது புத்தகத் திருவிழா நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
காலையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து தொடங்கி வைத்து அரங்குகளைப் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, பேருந்து நிலையம், கோயில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் புத்தகத் திருவிழா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பேருந்தில் வடிவமைக்கப்பட்ட நடமாடும் நூலக இயக்கத்தையும் ஆட்சியா் மு. அருணா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
டிச. 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். 100 அரங்குகளைக் கொண்ட இதில் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீத கழிவு வழங்கப்படவுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட நூலக அலுவலா் பா. முத்து, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் அ. மணவாளன், கவிஞா் ஜீவி, கவிஞா் ரமா ராமநாதன், பிச்சைமுத்து, ஆலங்குடி வெள்ளைச்சாமி, சோபா, முத்துக்குமாா், ம. வீரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை 9-ஆவது புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து அரங்குகளைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

