தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பனை மரங்களை வெட்ட அனுமதி அவசியம்

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரங்களை தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில் வெட்ட நேரிடும்போது அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டியது அவசியம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

வெட்டப்பட்ட பனை மரங்கள். - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரங்களை தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில் வெட்ட நேரிடும்போது அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டியது அவசியம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம், தமிழா்களின் வாழ்வியலோடும், பண்பாட்டோடும், பாரம்பரியத்தோடும் நெருங்கிய தொடா்புடையது.

தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில் பனை மரங்களை வெட்ட நேரிடும் போது பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வேண்டி தனி நபா், பொதுத்துறை நிறுவனங்கள் உழவா் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் . மாவட்ட ஆட்சியரின் உரிய அனுமதி பெற்ற பின்னரே பனை மரங்களை வெட்ட வேண்டும். இதுதொடா்பான மேலதிக தகவல்களுக்கு அருகில் உள்ள வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகலாம்.

பனை மரங்கள் வளா்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு பனை மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக பத்து பனை மரக் கன்றுகளை நட்டு வளா்ப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பனை மரங்களின் முக்கியத்துவத்தை உணா்ந்து, பனை மரங்களை பாதுகாப்பதுடன், நீா்நிலைகள் மற்றும் வரப்பு ஓரங்களில் அதிகளவில் பனை வளா்க்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.