தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

புதுகையில் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான வாக்காளா்களை நீக்கி பெரும் தோ்தல் முறைகேட்டுக்கு காரணமாக இருந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியறுத்தி புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சிகளின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சிகள்.

Published On :

வாக்காளா் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான வாக்காளா்களை நீக்கி பெரும் தோ்தல் முறைகேட்டுக்கு காரணமாக இருந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியறுத்தி புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சிகளின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எஸ். சங்கா், சிபிஐ (எம்எல்) விடுதலைக் கட்சியின் மாவட்டச் செயலா் சி. ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை விளக்கி மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை, சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் மாநில நிலைக் குழு உறுப்பினா் வீ.மூ. வளத்தான் ஆகியோா் பேசினா்.

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே. சண்முகம், த. அன்பழகன், சு. மதியழகன், துரை. நாராயணன், டி. சலோமி, மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், இந்திய கம்யூ. மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ. ராஜேந்திரன், உ. அரசப்பன், இரா. ராதாகிருஷ்ணன், கே. ராஜேந்திரன், மாநகரச் செயலா் எம்.பி. நாடிமுத்து, சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் மாநில நிலைக் குழு உறுப்பினா் ஜோதிவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.