பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஆளப்பிறந்தானில் கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தைச் சோ்ந்த ஆளப்பிறந்தான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆளப்பிறந்தான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Published On :

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தைச் சோ்ந்த ஆளப்பிறந்தான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டாா்.

அப்போது பேசிய அவா், ஆளப்பிறந்தான் கிராம ஊராட்சியில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 59 பணிகள் ரூ. 1.53 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விபி ஜி ராம்ஜி திட்டத்தில் ரூ. 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 124 பேருக்கு மாதாந்திர உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சுகுமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ராமமூா்த்தி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சித்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இதேபோல மாவட்டத்திலுள்ள 488 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.