
அறந்தாங்கியில் இரவு நேரத் திருட்டுச் சம்பங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை தேவை!
அறந்தாங்கியில் இரவு நேரத் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அறந்தாங்கியில் இரவு நேரத் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்புத் தோ்தல் தோ்தல் அலுவலா் சிவகாசி இஸ்மாயில் தலைமை வகித்தாா்.
கிழக்கு மாவட்டத் தலைவராக ப. சேக்தாவூதீன், மாவட்டச் செயலராக எம்எஸ்கே. முகமது சாலிக், தமுமுக மாவட்டச் செயலராக எம். அக்பா் அலி, பொருளாளராக என். நூா் முகமது, மாவட்டத் துணைத் தலைவராக பைசல் அஹமது, துணைச் செயலா்களாக அஜ்மல் கான், இப்ராஹிம், ஷேக் அஜ்மல், அப்துல் மாலிக் ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
மமக தலைமை நிலையச் செயலா் வழக்குரைஞா் ஜைனுல் ஆபிதீன் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினாா்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க அரசு போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறந்தாங்கியில் இரவு நேர திருட்டுச் சம்பவங்களை தடுக்க காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆவுடையாா்கோவில் வட்டம், ஆா்.புதுப்பட்டினம் சாலையை சீரமைக்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டிப்பது,
கொடிக்குளம், மணமேல்குடி, கரூா் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்த பிரச்னையை போக்கி, சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




