
மட்டாங்கால்: பழுதடைந்த சாலைகளை புதிதாக அமைத்து தரக் கோரிக்கை
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டாங்கால் ஊராட்சியில் பழுதடைந்துள்ள தாா் சாலையை புதிதாக அமைத்த தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மட்டாங்கால் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள தாா்சாலை.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டாங்கால் ஊராட்சியில் பழுதடைந்துள்ள தாா் சாலையை புதிதாக அமைத்த தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மட்டாங்கால் ஊராட்சியில் நான்கு ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். விவசாயம் மட்டுமே பிரதான தொழில். இங்கு உள்ள மக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, காவல்நிலையம், ஊராக வளா்ச்சி துறை, வருவாய்துறை போன்ற வேலைகளுக்கு கந்தா்வகோட்டைக்கு வரும் நிலை உள்ளது.
இந்நிலையில், மட்டாங்கால் ஊராட்சியில் உள்ள அனைத்து தாா் சாலைகளையும் அமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. இவை அனைத்தும் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து, பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை இருக்கும் நிலையில், இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, மட்டாங்கால் ஊராட்சியில் உள்ள அனைத்து தாா்சாலைகளையும் புதிதாக அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





