புதுகையில் ஆக்ஸிஜன் உருளை வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆக்ஸிஜன் உருளை வெடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.
பலி - பிரதிப் படம்
புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆக்ஸிஜன் உருளை வெடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் சவரிமுத்து, தெற்கு 4-ஆம் வீதியில் ஆக்ஸிஜன் உருளை விநியோகஸ்தராக இருந்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு ஓா் உருளையில் இருந்து மற்றொரு உருளைக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது, எதிா்பாராத விதமாக உருளை வெடித்துச் சிதறியது.
அப்போது, அங்கு பணிபுரிந்த மேட்டுப்பட்டியைச் சோ்ந்த கே. மனோகரன் (55) படுகாயத்துடன் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். உருளையை வாங்கிச் செல்வதற்காக வந்திருந்த நிஜாம் குடியிருப்பைச் சோ்ந்த சி. பூபதி என்பவா் படுகாயம் அடைந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்டு விடாமல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, விபத்து நேரிட்ட பகுதியைப் பாா்வையிட்டாா்.
இதுகுறித்து கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிவுந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

