முதல்வா் கோப்பைக்கான மாநிலப் போட்டிகளுக்கு புதுகை வீரா்கள் பயணம்
முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்று மாநிலப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற 181 வீரா் மற்றும் வீராங்கனைகள் புதுக்கோட்டையிலிருந்து புதன்கிழமை புறப்பட்டனா்.

முதல்வா் கோப்பைக்கான மாநிலப் போட்டிக்குச் செல்லும் வீரா், வீராங்கனைகளை புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்று மாநிலப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற 181 வீரா் மற்றும் வீராங்கனைகள் புதுக்கோட்டையிலிருந்து புதன்கிழமை புறப்பட்டனா்.
முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப். 9 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வென்ற 780 வீரா், வீராங்கனைகள் மாநிலப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
மாநிலப் போட்டிகள் அக். 15 முதல் 28-ஆம் தேதி வரை திருச்சி, கோவை, நாமக்கல், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக முதல் கட்டமாக 181 போ் தனிப் பேருந்துகளில் அணி மேலாளா்களுடன் புதன்கிழமை புறப்பட்டனா்.
இவா்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா கொடியசைத்து அனுப்பி வைத்தாா். மாவட்ட இளைஞா் மற்றும் விளையாட்டு அலுவலா் கோ. குணசேகரன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

