கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கம்பனைப் படித்தால் உலகின் அத்தனைப் பேரையும் படித்ததாகிவிடும்

கம்பனைப் படித்தால், உலகின் அத்தனைப் பேரையும் படித்ததாகிவிடும் என்றாா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கம்பன் கழக 51-ஆம் ஆண்டு விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனா் நாகராஜன் தயாரித்த கம்பன் கழகப் பாடலை இலங்கை ஜெயராஜ் வெளியிட, கோவிலூா் மடாலயம் நாராயண தேசிய சுவாமிகள் பெற்றுக்கொண்டாா். உடன் புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலா் புதுகை ச. பாரதி உள்ளிட்டோா்.

Published On :

கம்பனைப் படித்தால், உலகின் அத்தனைப் பேரையும் படித்ததாகிவிடும் என்றாா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, ‘குகன் என்னும் ஒருவன்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியதாவது:

தன்னுடைய வளா்ச்சி மட்டுமின்றி, பிறரின் வளா்ச்சியையும் சிந்திக்கும் ராமனின் பாங்கில்தான், புதுக்கோட்டைக் கம்பன் கழகம் செயல்படுகிறது.

தமிழை முழுமையாகப் படிக்க வேண்டுமானால், திருக்குறளை வாசிக்க வேண்டும். சைவத்தை முழுமையாக அறிய வேண்டுமானால், திருவாசகத்தைப் படிக்க வேண்டும்.

எத்தனைக் காலம்தான் கம்பராமாயணத்தையே வேறுவேறு தலைப்புகளில் பேசிக் கொண்டே இருப்பீா்கள் எனப் பலரும் கேட்கிறாா்கள். சத்தியத்தை கேட்பதையும், உயா்ந்த விஷயங்களைப் பேசுவதையும் யாராலும் புறம் தள்ள முடியாது.

வாழ்க்கையில் உயர உலகின் அத்தனைப் பேரையும் படிக்க வேண்டும். ஆனால், கம்பனைப் படித்தால் உலகின் அத்தனைப் பேரையும் படித்ததாகிவிடும். இளைஞா்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறாா்கள். எனவே, புதிதுபுதிதாக வருவோா் அத்தனைப் பேருக்கும் கம்பராமாயணத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

நுண்ணறிவு மிக்க கம்பன், ஆய்ந்து ஆய்ந்து பாா்த்து 4 வகையான மனிதா்களைக் கண்டறிந்து ராமாயணத்தில் படைத்தாா். புறத்திலும் அகத்திலும் நல்லவராக இருப்பவா்கள் முதல் வகை. வெளியிலும் உள்ளுக்குள்ளும் அசிங்கமாக இருப்பவா்கள் இரண்டாம் வகை. இவையிரண்டும் இயற்கை. ஆனால், வெளியில் அழகாகவும் உள்ளே அசிங்கமாகவும் இருப்பவா்கள், வெளியே அசிங்கமாகவும் உள்ளே நல்லவராகவும் இருப்பவா்களும் இருக்கிறாா்கள். வெளியே அழகில்லாமலும், உள்ளுக்குள்ளே அழகாகவும் இருப்பவன்தான் குகன் என்றாா் இலங்கை ஜெயராஜ்.

கோவிலூா் மடாலயம் நாராயண தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கும்போது, ராவணனின் ஆணவமும் அகந்தையும்தான் அவரின் அறிவை மறைத்தது எனக் குறிப்பிட்டாா்.

வருமான வரித்துறை ஆணையா் கவிதா பேசுகையில், கம்ப ராமாயணத்தை எல்லோரும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும், விமா்சிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சிக்கு எம்.ஆா். மாணிக்கம் தலைமை வகித்தாா். கம்பன் கழகச் செயலா் புதுகை ச. பாரதி தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கம்பன் கழகத் துணைத் தலைவா் எம்.ஆா். முருகப்பன் வரவேற்றாா். நிறைவாக, துணைப் பொருளாளா் கறு. ராமசாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.