
புதுக்கோட்டை மீன் சந்தையில் சோதனை கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்!
புதுக்கோட்டையிலுள்ள மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் சோதனையில், 200 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மீன் சந்தையில் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
புதுக்கோட்டையிலுள்ள மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில், 200 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமம் பெறாத 10 கடைக்காரா்களுக்கு மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி நகா் நல அலுவலா் டாக்டா் காயத்ரி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் டாக்டா் ஆண்டனி பிரபு மற்றும் அலுவலா்கள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 200 கிலோ மீன்களை அவா்கள் பறிமுதல் செய்தனா். மேலும் மாநகராட்சி அனுமதி சான்று பெறாத மீன் கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்புத் துறையின் தரச் சான்று புதுப்பிக்காத மீன் கடை உரிமையாளா்களை எச்சரித்த அதிகாரிகள், உடனடியாக புதுப்பிக்கவும் அறிவுறுத்தினா். தொடா்ந்து அந்த பகுதியில் உள்ள ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் சோதனை மேற்கொண்டனா். பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







