கும்பகோணத்தில் புதுச்சேரி மது விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் புதுபஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடுத்துள்ள பாரில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் அந்த பாரில் சோதனையிட்டார். அப்போது 87 புதுச்சேரி மதுபாட்டில்களும், 10 லிட்டர் புதுச்சேரி ஸ்பிரிட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாரில் இருந்த ஊழியர் மதகடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (33) எனபவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








