/

ரயில்களில் நகைகள் திருட்டு:இளைஞர் கைது

தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் ஓடும் ரயில்களில் தங்க நகைகள் திருடியதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :13 மே 2013, 1:33 am IST

தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் ஓடும் ரயில்களில் தங்க நகைகள் திருடியதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சை ரயில் நிலைய நடைமேடையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்கேத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் சிதம்பரம் சின்னக்கடை பாரதி தெருவைச்  சேர்ந்த சண்முகம் மகன் தினேஷ்குமார் (18) என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயிலில் மே 8 -ம் தேதி நிகழ்ந்த 3 பவுன் நகை திருட்டு, கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணியிடம் ஒன்றரை பவுன் நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தினேஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.