வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

"உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது'

 உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்குப் பொதுமக்கள் வாக்களிக்கக்கூடாது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

 உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்குப் பொதுமக்கள் வாக்களிக்கக்கூடாது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்கக் கோரி, மார்ச் 1-ம் தேதி சென்னையில் தொடங்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் இரு சக்கர வாகனப் பேரணி தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இந்தப் பேரணியில் வந்த வெள்ளையன் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய எதிரில் செய்தியாளர்களிடம் கூறியது:

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நாட்டை நாசப்படுத்தி வரும் உலக வர்த்தக ஒப்பந்தத்தால், நாட்டில் தரமற்ற பொருள்கள் வெளிவருகின்றன. உடல் நலத்துக்குத் தீங்கு தரும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க வேண்டும். உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றார் வெள்ளையன். அப்போது, பேரவையின் மாவட்டத் தலைவர் எம். கணேசன், செயலர் முருகேசன், பொருளாளர் ஆத்மநாதன், தஞ்சை நகரத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.