கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

நகைக் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தங்க நகைகள் மீது மத்திய அரசு ஒரு சத கலால் வரி விதித்துள்ளதைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சாவூர் நகர காசுக்கடை வர்த்தகர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

தங்க நகைகள் மீது மத்திய அரசு ஒரு சத கலால் வரி விதித்துள்ளதைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சாவூர் நகர காசுக்கடை வர்த்தகர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே, மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது விதிக்கப்பட்ட ஒரு சத கலால் வரியை ரத்து செய்யக் கோரி அகில இந்திய அளவில் புதன்கிழமை முதல் தொடர்ந்து

நகைக் கடைகள் அடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 2,000 நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தங்க நகைகள் மீது மத்திய அரசு ஒரு சத கலால் வரி விதித்துள்ளதைக் கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் வாசுதேவன், எஸ்.ஆர். வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.