பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

தேர்தல் நடத்தை விதிகள் அமல்பதாகைகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விதமான விளம்பரப் பதாகைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பைய

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விதமான விளம்பரப் பதாகைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பையன் உத்தரவிட்டார்.

ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர்

பேசியது:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதால், அதை கடைப்பிடிப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து விதமான பதாகைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலையோர பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

பறக்கும் படை குழுக்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கலந்தாய்வு கூட்டங்களை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு 3 நாள்களுக்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும். கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். தொலைக்காட்சி, செய்தித்தாள், துண்டு பிரசுரம் போன்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி சான்று பெற வேண்டும்.

நகர்ப்புறங்களில் வீட்டு உரிமையாளர்கள் அனுமதித்தாலும், சுவர்களில் விளம்பரம் எழுதுவதற்கு அனுமதி இல்லை. கிராமப்புறங்களில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன் சுவர் விளம்பரம் எழுதலாம்.

வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கட்சிகளின் கொடிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகன்ன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.