விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தஞ்சாவூர் அருகே மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 இளைஞர்கள் சாவு

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:21 pm

DIN

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம்,  சீர்காழி அருகேயுள்ள தென்பாதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ராஜ விக்னேஷ் (22). இவர் தஞ்சாவூரில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது மோட்டார் சைக்கிள் திருச்சியில் உள்ள பழுதுபார்ப்பு கடையில் பழுதுபார்க்கப்பட்டது. இதை எடுத்து வருவதற்காக ராஜ விக்னேஷ் தனது நண்பரான சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வரும் சீர்காழி அருகேயுள்ள இனாம்குளத்தலப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் பாலமுருகனுடன் (22) திருச்சிக்கு புதன்கிழமை சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நள்ளிரவு 12.45 மணியளவில் தஞ்சாவூர் நோக்கி ஓட்டி வந்தனர்.
வல்லம் அருகே முன்னையம்பட்டி பிரிவு சாலை பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ராஜவிக்னேஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.