விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்க்காப்பீடு வழங்கப்படும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் தகவல்
விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு தெரிவித்தார்.


விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு தெரிவித்தார்.
பேராவூரணி வட்டம் விளங்குளம் ஊராட்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 10 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். முகாமில் அவர் பேசுகையில், "தகுதியுள்ள விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு இழப்பு தொகை உடனடியாக பெற்றுத்தரப்படும். பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும். விளங்குளம் திருக்கோயில் சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேய்ச்சல் தரிசு, புஞ்சை நிலங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆய்வு செய்யப்படும்' என்றார்.
மக்கள் நேர்காணல் முகாமையொட்டி சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில், முன்னாள் ஊராட்சித் தலைவர் வீ.கே.முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...