தஞ்சாவூர் கிங்ஸ் பொறியியல் கல்லூரியும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய வளங்குன்றா வளர்ச்சிக்கான அறிவியல், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பிலான 25-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் அ. திருவள்ளுவர் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 10 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் திட்டங்களையும், ஆய்வுகளையும் சமர்ப்பித்தனர்.
இன்றைய சூழ்நிலையின் பல்வேறு பிரச்னைகளுக்கு மாணவர்கள் தங்களது திட்டங்கள் மூலமாக தீர்வுகளை சமர்ப்பித்தது பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. மாநாட்டிற்கு கல்லூரியின் முதல்வர் ஜே. அற்புத விஜயசெல்வி தலைமை வகித்தார். நிறைவு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட அறிவியல் இயக்கத் தலைவர் நாராயணசாமி வரவேற்றார். செயலர் சுகுமாறன் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி செயலர் ராஜேந்திரன் மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், நினைவுப் பரிசும் வழங்கி பாராட்டினார். ஓம்கார் கடலாய்வு கல்வி மையத்தின் இயக்குநர் பாலாஜி, திருச்சி மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் பாஸ்கர், கல்லூரி துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.