மாநில டேக்வாண்டோ: குடந்தை அரசுப் பள்ளி மாணவி முதலிடம்
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.


மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 14 வயது பிரிவு போட்டியில் கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவி சூர்யகுமாரி கலந்து கொண்டு, முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
தங்கம் வென்ற மாணவி சூர்யகுமாரியை பள்ளி தலைமையாசிரியர் சித்ரா , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...