எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இறால் பண்ணை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் மீது வழக்கு

அதிராம்பட்டினம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இறால் பண்ணை ஊழியர் எஸ்.காளிதாஸ் (49). இவர் புதன்கிழமை இரவு அதிரை

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:20 pm

DIN

அதிராம்பட்டினம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இறால் பண்ணை ஊழியர் எஸ்.காளிதாஸ் (49). இவர் புதன்கிழமை இரவு அதிரை ஈசிஆர் சாலையிலுள்ள குமார் என்பவரின் பெட்டிக்கடை முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தாராம். 
அப்போது பைக்கில் அங்கு வந்த பட்டுக்கோட்டை சாந்தாங்காடு மன்னார் (எ) அருண்சந்தர்,  ஆர்.பிரசாந்த்,  பட்டுக்கோட்டை முடிபூண்டார் நகர் ஜெ.பிரசாந்த் ஆகிய 3 பேரும் கத்தியை காட்டி பணம் கேட்டு காளிதாஸை மிரட்டினராம். அவர் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த 3 பேரும் காளிதாஸ் பைக்கின் முகப்பு விளக்கை கல்லால் அடித்து சேதப்படுத்தி விட்டு,  அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து காளிதாஸ் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.