தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்ப தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
நிகழாண்டு கோடைகாலத்தில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, தாகம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்தி நூல் துணி ஆடைகள் அணிய வேண்டும்.
வீட்டின் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருந்தால், பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரத்தில் அவற்றை விலக்கி வைத்தும் வீட்டை குளுமையாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்சி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருக வேண்டும்.
வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து, அதற்குத் தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும் ஆகிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
செய்யக்கூடாதவை: நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிக புரதம் - மாமிச கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


