ஒரத்தநாடு வட்டம், வடக்கூரில் பகுதிநேர செவிலியரை தாக்கிய இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவர் தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேர செவிலியராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை அதே ஊரை சேர்ந்த திருவாசகம் மகன் கணபதி, ராமமூர்த்தி மகன் சிவக்குமார் ஆகிய இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்து ரத்த காயங்களுடன் இரவு வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்தனராம். அப்போது, ஐஸ்வர்யா தனது ஓய்வு அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். குடிபோதையில் இருந்த கணபதி, சிவக்குமார் இருவரும் ஏன் காலதாமதமாக வருகிறாய் என்று கூறி ஐஸ்வர்யா மீது செருப்பை எடுத்து வீசி, தகாத வார்த்தையால் திட்டி, கழுத்தை பிடித்து நெரித்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மருத்துவமனை ஊழியர் கூச்சலிட்டதால் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனராம். இதுகுறித்து ஐஸ்வர்யா அளித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காணிக்கையாக சிலைகள்!

மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது? அமைச்சர் வினோத் பதில்!

யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தை! ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள்!

கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டு!
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |


