காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் மனிதச் சங்கிலி: தஞ்சாவூர் காந்திஜி சாலையில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வழக்குரைஞர்கள் புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, காந்திஜி சாலையில் இரட்டை மஸ்தான் தர்கா பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கச் செயலர் பாலமுரளி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் நீதிமன்றச் சாலையில் கும்பகோணம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் வழக்குரைஞர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
பாபநாசத்தில்... பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற வழக்குரைஞர்கள் சங்க வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்குரைஞர்கள் சங்க தலைவர் என்.பாஸ்கரன் தலைமையில், செயலாளர் ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் வெற்றிசெல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி
இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


