பழநி முருகன் கோயில் சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்களை கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவபாஷாண மூலவர் சிலையை புதிதாக வடிவமைத்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கோயிலின் முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா (66), சிலையை வடிவமைத்த முத்தையா ஸ்தபதி (77) ஆகியோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மார்ச் 24-ம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு ஏப். 2-ம் தேதி சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ராஜா, முத்தையா ஸ்தபதி ஜாமீன் கேட்டு ஏப். 2-ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் இந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







