தஞ்சாவூர் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு முகாம் ஏப். 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் தெரிவித்திருப்பது:
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் சமரச விழிப்புணர்வு முகாம் ஏப். 9-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் நீதி மன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது. நீதி மன்றத்தில் வழக்குகள் இருந்தால் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞர் மூலமோ ஆஜராகும்போது வழக்கை சமரச மையத்துக்கு அனுப்ப கோரலாம். சமரச மையத்தில் மனுதாரர்களே எதிர் தரப்புடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
சமரச வழக்குகளில் வழக்குரைஞரும் பங்கு கொண்டு மனுதாரருக்கு உதவலாம். வழக்கை சமரசம் செய்து கொள்வதால் எந்த வகையிலும் பாதிக்காது. சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் எவ்வகையிலும் பதிவு செய்யப்பட மாட்டாது.
சமரசம் ஏற்படவில்லை என்றால் தங்களுடைய வாதத்தை நீதிமன்றத்தின் முன் தொடரலாம். சமரச வழக்குகள் எவ்வித மேல் முறையீடு இல்லாமலும், விரைவாகவும் இறுதியாகச் சுமூமாகத் தீர்வு ஏற்படும்.
சமரசம் மூலம் வழக்குச் சுமூகமாகத் தீர்க்கப்பட்டால், நீதிமன்றக் கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
மக்களுக்குச் சமரசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக இந்த முகாம் நடைபெறவுள்ளது. சமரசம் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை இரு தரப்பினரும் எளிய முறையிலும், விரைவாகவும், பண விரயம் இல்லாமலும் முடிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும்.
சமரசத்துக்கு உகந்த வழக்குகளான தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, வாடகை தகராறு, காசோலை மோசடி, மின்சார வாரியம், தொழிலாளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளும் சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜன்னல் ஓரத்தில்...

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

பத்ம பூஷண் விருது! தனுஷ் - 55 படப்பிடிப்பில் கேக் வெட்டிய நடிகர் மம்மூட்டி!

வெனிசுவேலா நிலநடுக்கம்! 164 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! - இடைக்கால அதிபர் அறிவிப்பு!
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK


