முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பிச்சாடனாருக்கு பிள்ளை கறி கொடுக்கும் நிகழ்வு

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பிச்சாடனாருக்கு பிள்ளை கறி கொடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தத்ரூபமாக நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:49 am IST

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பிச்சாடனாருக்கு பிள்ளை 
கறி கொடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தத்ரூபமாக நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்ட நாயனார் மிகுந்த சிவபக்தி கொண்டவர். இவருக்கு மனைவி மற்றும் சீராளன் என்ற மகனும் இருந்தனர்.
சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிறுதொண்ட நாயனாரின் சிவபக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான், பிச்சாடனார் வேடத்தில் சிறுதொண்ட நாயனாரின் வீட்டுக்கு செல்கிறார். அப்போது தனக்கு பசிக்கிறது என உணவாக பிள்ளை (குழந்தையின்) கறியை சமைத்து கேட்கிறார். சிறுதொண்ட நாயனாரும்  தன் மகன்  சீராளனின் உடலை அறுத்து சமைத்து கொடுக்கிறார்.
சிறுதொண்டநாயனாரின் சிவபக்தியை உணர்ந்த சிவபெருமாள், சிறுதொண்டநாயனாரிடம் உன் மகனை கூப்பிடு என கூறுகிறார். அவரும் சீராளன் என கூப்பிடவே தன் மகன் உயிரோடு வருவதை பார்த்து மெய்சிலிர்த்து போகிறார்.  
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற தினமான சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளான செவ்வாய்க்கிழமை கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் தேர் மண்டபத்தில், சிவபெருமானை பிச்சாடனார் வேடத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
 பின்னர் சிவாச்சாரியார்கள்,  பிள்ளைக் கறி எனும் பிரசாதத்தை பிச்சாடனாருக்கு வழங்கியும், பொதுமக்களுக்கும்  வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.