பாலியல் கொடுமைகளைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மகளிர் காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இதற்காக மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பாலியல் படுகொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிபாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மகளிர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர் ரேவதி ஷாக்கிலோ தலைமை வகித்தார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், ராஜ்குமார், கோட்டத் தலைவர்கள் ஷாக்கிலோ, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்

போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநர்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

மெணசியில் மின் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
