திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழ்ப் பல்கலை. - பிரெஞ்சு நிறுவனம் ஒப்பந்தம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகமும், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனமும் திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:37 am IST

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகமும், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனமும் திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
சுவடியியல், கலை பண்பாடு, சமூகம், நில அறிவியல் தொடர்பாக மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்துகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், மாநாடு, கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கத்தை இணைந்து மேற்கொள்வதற்கும், ஆய்வு தரவுகளைப் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பான செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இப்புரிந்துணர்வு செய்து கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், பிரெஞ்சு நிறுவன இயக்குநர் பிரிட்டிக் லேன்டி கையெழுத்திட்டனர். அப்போது, தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப் புலத் தலைவர் ந. அதியமான்,  முனைவர்கள் சு. ராஜவேலு, மோ.கோ. கோவைமணி, பேராசிரியர் ஒய். சுப்பராயலு, பி. கணேசன், செந்தில்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.