தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தல்

பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தினார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:30 am

DIN

பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தினார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: 
பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறான கருத்தை தமது வலைத்தளத்தில் பதிவு செய்தார். 
இதனைக் கண்டித்து, எஸ்.வி.சேகர் வீட்டின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. 
அதேவேளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட எஸ்.வி.சேகர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. நடிகர் எஸ்.வி.சேகரை உடனடியாகக் கைது செய்வதோடு, ஊடகத் துறையினர் மீது போடப்பட்ட வழக்கை கைவிட வேண்டும் என்றார் பெ.மணியரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.