சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்: இரா. துரைக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தெரிவித்தார்.

Updated On :

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தெரிவித்தார். கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: 
தாய்ப்பாலின் அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடத்தப்படுகிறது. 
சாக்கு பாற்றக்குறை என்பது கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இருந்தது. தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் போதிய அளவில் சாக்குகள் உள்ளன. சாக்கு பற்றாக்குறை என்பதே தற்போது இல்லை. கடைமடை வரை தண்ணீர் சென்று விட்ட நிலையில்,  சனிக்கிழமை முதல் அனைத்து கிளைவாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முழுமையாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி  பழனிசாமி ஆட்சியில் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.