திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் திறப்பு

அதிராம்பட்டினம் பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, அதிரை கடைமடை பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

அதிராம்பட்டினம் பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, அதிரை கடைமடை பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள் சார்பில், ஆக. 23 -ல் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆக.21-ம் தேதி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐ. மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், முதல் கட்டமாக ராஜாமடம் கிளை வாய்க்கால் மூலம் அதிரை கடைமடைப் பகுதியிலுள்ள 5 குளங்களுக்கு 20 நாள்களுக்குள் தண்ணீர் நிரப்பப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதன்படி, பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகிலுள்ள ராஜாமடம் கிளை வாய்க்கால்  செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் 
செல்வதற்காக திறந்து விடப்பட்டது. 
இந்த தண்ணீர் ஒரு சில நாள்களில் அதிராம்பட்டினம் பகுதியில் வறண்ட குளங்களை சென்றடையும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.