முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தோப்புவிடுதியில்  சாலை மறியல்

ஒரத்தநாடு வட்டம்,  திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட  தோப்புவிடுதி  கிராமத்தில் கஜா புயலின்

Updated On :25 டிசம்பர் 2018, 9:45 am IST

ஒரத்தநாடு வட்டம்,  திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட  தோப்புவிடுதி  கிராமத்தில் கஜா புயலின் போது ஏராளமான ஓட்டுவீடுகள், கூரை வீடுகள், தென்னை மரங்கள் காற்றில் விழுந்து சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பலரும் வீடுகள் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசின் நிவாரணப் பொருள்கள்  வழங்கவில்லை எனவும்,  சேதமடைந்த வீடுகளுக்கான உரிய நிவாரண தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவும் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள் கிழமை தோப்புவிடுதியில்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த திருவோணம் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.