கும்பகோணம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக இருவர் மீது போலீஸார் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கூவனூரைச் சேர்ந்த ராஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கும்பகோணம் அருகே பட்டீசுவரம் பகுதி முகுந்தநல்லூரைச் சேர்ந்த வினோத் (24), கிருஷ்ணமூர்த்தி (30) மூலம் அதே ஊரில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வினோத், கிருஷ்ணமூர்த்தியிடம் பட்டீசுவரம் போலீஸார் விசாரணை நடத்தி, முகுந்தநல்லூர் ராஜ அய்யனார் கோயில் மரத்தடியில் இருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை சனிக்கிழமை கைப்பற்றினர். இதுதொடர்பாக வினோத், கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்

ரூ.950 கோடி சம்பளம் வாங்கிய ஹாலிவுட் நடிகர்..! மார்வெல் திரைப்படங்களிலே அதிகம்!

மும்பையில் பல கோடி மதிப்பில் வீடு கட்டிய பூஜா ஹெக்டே!

ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தைப் பார்த்ததில்லை: மாணவர்களை விமர்சித்த கங்கனா!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


