மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
பட்டுக்கோட்டையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்திலுள்ள ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 20-வது ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.


பட்டுக்கோட்டையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்திலுள்ள ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 20-வது ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பட்டுக்கோட்டை கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ.முகமது அப்துல் காதர் சிறப்புரையாற்றினார்.
அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் இராம. குணசேகரன், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எஸ்.பி.கணபதி, மாளியக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் ஆர்.பி.ரமேஷ், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ.ஆர்.ரகுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், கல்வி, விளையாட்டில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வர் என். உதயகுமார் வரவேற்றார். ஆர். தனபால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
முதுகலை ஆசிரியர் ஆர். போஸ்ராஜா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...