அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்


சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் ரா. முருகன், துணைத் தலைவர் ப. சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். 7 வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 வது யூஜிசி ஊதிய பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ போராட்டக்குழுவினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.இதில் அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...