சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஒரத்தநாட்டில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

ஒரத்தநாட்டில் மாவட்ட காசநோய் தடுப்பு அலுவலகம், ஒரத்தநாடு அரசு மருத்துவமணை மற்றும் ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் புதன்கிழமை  காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:58 am

DIN

ஒரத்தநாட்டில் மாவட்ட காசநோய் தடுப்பு அலுவலகம், ஒரத்தநாடு அரசு மருத்துவமணை மற்றும் ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் புதன்கிழமை  காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
பேரணிக்கு மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் பேராசிரியர் பிரேமாவதி தலைமை வகித்தார். 
மாவட்ட காசநோய் தடுப்பு அலுவலர் மாதவி,  வட்டார மருத்துவ அலுவலர் இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரத்தநாடு அரசு மருத்துவமணை மருத்துவர் வெற்றிவேந்தன்,  பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் காசநோய் அறிகுறிகளான,  இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல்,  சளி,  விட்டு விட்டு காய்ச்சல் , பசியின்மை, எடை குறைவு,  மார்பு வலி,  விலாவில் வலி,  சளியில் ரத்தம் வருதல் போன்றவைதான் 
காசநோயின் அறிகுறிகள் என முழக்கமிட்டு ஒரத்தநாடு கடைத்தெரு வழியாக ஒரத்தநாடு அரசு மருத்துவமனை சென்றடைந்தனர். 
இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். 
பேரணி ஏற்பாடுகளை பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் இளம்பிறை, அரசு மருத்துவமனை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.