இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து: 25 பேர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேனின் முன்பக்க டயர் வெடித்து நேரிட்ட விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 25 பேர் காயமடைந்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:42 am IST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேனின் முன்பக்க டயர் வெடித்து நேரிட்ட விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 25 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 36 பேர்  சுற்றுலா வேன் மூலம் வேளாங்கண்ணி கோயிலுக்கு வந்தனர். வேனை மணி (35) என்பவர் ஓட்டினார். வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு,  சனிக்கிழமை இரவு தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.  
ஒரத்தநாடு அருகேயுள்ள பனையக்கோட்டை கயறு ஆலை அருகே வந்தபோது வேனின் முன்பக்க டயர்  எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.  இதில் வேனில் பயணித்த ரவிச்சந்திரன் மனைவி லெட்சுமி (60),  பாலசுப்பிரமணியன் மகன் விஜயன்(52) ஆகிய இரண்டு பேர் உள்பட 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.