தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சோழர்களின் வரலாற்று தடயங்களை தேடி குழுவினர் பயணம்

இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள ஏதுவாக சோழர்களின் வரலாற்று தடயங்களை தேடி வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய

Updated On :23 ஜூலை 2018, 8:40 am IST

இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள ஏதுவாக சோழர்களின் வரலாற்று தடயங்களை தேடி வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் திருப்புறம்பியம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டனர்.
சென்னை, மும்பை, பெங்களூரு, மதுரை ஆகிய ஊர்களில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என 20 பேர் அடங்கிய குழுவினர் சோழர்களின் வரலாறை தெரிந்து கொள்ள ஏதுவாக மாதம் ஒருமுறை சோழர்களின் ஆட்சிப் பகுதியில் உள்ள கோயில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு நடைபெற்ற வரலாற்று சம்பவங்களை நினைவுகூர்ந்து, அதனை நாடகமாக அரங்கேற்றி குறிப்பெடுத்து வருகின்றனர்.
அதன்படி, இந்தக் குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அங்கு 1000 ஆண்டுகளுக்கு முன் அருண்மொழிவர்மனுக்கும், பாண்டிய நாட்டு மன்னனுக்கும் இடையே போரிடுவதற்கு முன் நடைபெற்ற சொற்போரினை நாடகமாக நடித்து காட்டினர். இதனை கிராம மக்களும் பார்வையிட்டனர்.
பின்னர், முதலாம் ராஜேந்திரசோழன் கட்டிய தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், ராஜராஜசோழனின் மனைவி லோகமாதேவி கட்டிய திருவையாறு கோயில், ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோயில் ஆகியவற்றை பார்வையிட்டு, கோயிலில் உள்ள சிற்பங்கள், கட்டுமானங்கள், கல்வெட்டுகள், மெய்கீர்த்திகள் ஆகியவற்றை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் சென்னை ஆனந்த் கூறியது: தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டும் பொன்னியின் செல்வன் நாவல் வழித்தொடரின் அத்தியாயமாக ஒற்றன் பாதை என்ற சோழர்களின் அனைத்து மன்னர்களை பற்றிய ஆய்வை நாங்கள் நடத்தி வருகிறோம்.
சோழர்களுடைய நிர்வாக திறமையும், போர்களும், அரசவை, தலைமைப் பண்பை பற்றியும், அவர்கள் விட்டுச்சென்ற கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய கோயில்கள் பற்றியும் அறிந்து, அதனை இளைய  தலைமுறையினர் தெரிந்து கொள்ள இந்த சோழ மன்னர்களை பற்றிய வரலாற்று ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.
சனிக்கிழமை வீராணம் ஏரி, காட்டுமன்னார்குடி, கடம்பூர், கங்கைகொண்டசோழபுரம்,  ஞாயிற்றுக்கிழமை  உடையாளூர், திருப்புறம்பியம், திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று சோழ மன்னர்களின் பாரம்பரியத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பதிவு செய்துள்ளோம்.
விரைவில் சோழமன்னர்களின் வரலாறு தொடர்பாக நாங்கள் அறிந்தததை இணையதளத்தில் பதிவு செய்ய உள்ளோம். இதன் மூலம் தமிழர் பாரம்பரியம், மரபுகளை, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.