பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதை பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை சதுரங்க கழகங்கள் ஆகியன இணைந்து நடத்தின.
இதில் 1-4 ஆம் வகுப்புகள், 5-6 ஆம் வகுப்புகள், 7-8 ஆம் வகுப்புகள், 9-10 ஆம் வகுப்புகள், 11-12 ஆம் வகுப்புகள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமை நடுவராக திருவாரூர் ஆர்.கே.பாலகுணசேகரன் செயல்பட்டார். போட்டியில் மொத்தம் 460 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இவர்களில் வெற்றி பெற்ற 125 பேருக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சி.வி.தங்கையன் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.மயில்வாகனன், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் என்.அன்பழகன் காலையில் போட்டியைத் தொடங்கி வைத்து, மாலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏ.ஆர்.அன்பு, ஜி.ஜெயசீலன், ஜி.இமானுவேல்ராஜ், எம்.வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ஜி.தேவசகாயம் வரவேற்றார். செயலர் பி. கோபிநாதன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஷாலின் மகுடம் பட டீசர் வெளியானது!

ஜூன் 11: சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி! லாபம் பெற்ற நிறுவனங்கள் எவை?

உலகக் கோப்பையின் அதிபதி: கிரிக்கெட்டை விட 87 மடங்கு அதிக பரிசுத் தொகையுடன் களமிறங்கும் ஃபிஃபா!





