காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

"காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்'

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என்றார் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:21 am

DIN

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என்றார் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.
இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்போதையை கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை மன்னிப்பு கேட்க வைத்தார். அத்துடன் பல போராட்டங்களையும் நடத்தினார். தற்போது 14.75 டி.எம்.சி. தண்ணீரை இழந்து விட்டோம். அதை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எப்படி ஏற்றுக் கொண்டனர் எனத் தெரியவில்லை.  காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்களை நிச்சயம் சந்திக்க மாட்டார். எனவே, அனைத்துக் கட்சி என்ற பெயரில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது. இது ஒரு கண்துடைப்பு வேலை. ப. சிதம்பரம் சில நாள்களாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இதற்காகத்தான் அமலாக்கத் துறையும், வருமானவரித் துறையும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்துள்ளன என்றார் 
புகழேந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.