தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

குடந்தையில் இன்று மாசிமக தீர்த்தவாரி: பாதுகாப்புப் பணியில் 400 போலீஸார்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மாசி மக தீர்த்தவாரி மற்றும் தேரோட்ட விழாவின் பாதுகாப்புப் பணியில் 400 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:21 am

DIN

கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மாசி மக தீர்த்தவாரி மற்றும் தேரோட்ட விழாவின் பாதுகாப்புப் பணியில் 400 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாசி மகத்தையொட்டி மகாமக குளத்தில் வியாழக்கிழமை புனிதநீராடல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கும்பகோணத்துக்கு வந்துள்ளனர். 
மேலும், சக்கரபாணி கோயிலில் காலை தேரோட்டமும்,  சாரங்கபாணி கோயிலில் மாலை நிலைத்தெப்ப உற்ஸவமும் நடைபெறுகிறது. கோயிலில் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் உத்தரவின் பேரில், கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி தலைமையில் 15 ஆய்வாளர்கள், 25 உதவி ஆய்வாளர்கள், 130 போலீஸார், 150 ஊர்காவல் படையினர், 25 போக்குவரத்து பிரிவு போலீஸார் உள்பட 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
மேலும், கும்பகோணம் நகரில் 200 இடங்களில் நிரந்தர கண்காணிப்பு கேமராக்களும்  மகாமக குளத்தின் நான்கு கரையிலும் தாற்காலிக ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன   என்று  டிஎஸ்பி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.