தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தஞ்சாவூர் - சோழகம்பட்டி 2-ஆவது  இருப்புப் பாதையில் ரயில்கள் இயக்கம்

தஞ்சாவூர் - சோழகம்பட்டி இடையே அமைக்கப்பட்ட இரண்டாவது இருப்புப் பாதையில் ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 1:44 am

தஞ்சாவூர் - சோழகம்பட்டி இடையே அமைக்கப்பட்ட இரண்டாவது இருப்புப் பாதையில் ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் - பொன்மலை (திருச்சி அருகில்) இடையேயுள்ள 47 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதையை இரு வழிப் பாதையாக அமைக்க ரூ. 450 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.
இதையடுத்து, தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் இடதுபுறமாக, ஏற்கெனவே மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த தடத்தில், இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக பொன்மலை - சோளகம்பட்டி இடையேயான 18 கி.மீ. தொலைவுக்கு இரண்டாவது இருப்புப் பாதை அமைக்கும் பணி 2017 ஜூலை மாதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்டமாக சோளகம்பட்டி - தஞ்சாவூர் இடையே 29 கி.மீ. தொலைவுக்கு இரண்டாவது இருப்புப் பாதை அமைக்கும் பணி முடிந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை நடத்தி, சான்று அளித்தார். இதையடுத்து, சிறு, சிறு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அப்பணிகள் செவ்வாய்க்கிழமை முடிக்கப்பட்டன. 
இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாவது இருப்புப் பாதையில் ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கப்பட்டது. இதில், முதல் ரயிலாக சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து, மற்ற விரைவு ரயில்களும் இயக்கப்பட்டன. புதன்கிழமை முதல் ஏற்கெனவே உள்ள இருப்புப் பாதையில் திருச்சியில் இருந்து வரும் ரயில்களும், இரண்டாவது இருப்புப் பாதையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் திருச்சி - தஞ்சாவூர் வழித்தடத்தில் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைந்துள்ளன என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தடத்தில் 13 பெரிய பாலங்கள், 40 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. தஞ்சாவூர் - திருச்சி வழித்தடத்தில் உள்ள பூதலூர், சோளகம்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரயில் நிலையங்கள் விரிவாக்கமும் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.