விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பாலியல் வழக்கில் கைதான 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தஞ்சாவூர் அருகே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On :14 மே 2018, 10:39 pm

தஞ்சாவூர் அருகே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் அருகே வெட்டிக்காடு பாலம் பகுதியில் நெய்வாய்க்கால் அருகே 11-ம் வகுப்பு மாணவி ஏப். 1-ம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் பரிந்துரையின் பேரில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விளார் புறவழிச்சாலை ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எம். இளவரசன் (22), எம். கார்த்திக் (20), கீழ வஸ்தா சாவடி செல்வம் (19), என். இளவரசன் ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்குமாறு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆணையிட்டார். இதையடுத்து, நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.