காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் நிரந்தர ரயில் சேவையை தொடங்க வேண்டுமென பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமனுக்கு அனுப்பியுள்ள மனு:
காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2012 ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த வழித்தடத்தில் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கிய நிலையில், தற்போது காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே மட்டும் 75 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2018 பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.
பின்னர், பிப். 27, 28 மார்ச் 1 ஆகிய தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனைகளும், அதிகபட்சமாக 118 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பயணிகள் ரயில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே இயக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ் புத்தாண்டான ஏப்.14 முதல் இவ்வழித்தடத்தில் நிரந்தர ரயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பின்னரும் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே நிரந்தர ரயில் சேவை தொடங்காமல் ரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்துவது இப்பகுதி மக்களை மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இப்பகுதி முன்னேற்றத்திற்காக ரயில் சேவையை தாமதமின்றி தொடங்க ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே ரயில் சேவையைத் தொடங்கவும், நிலுவையில் உள்ள தஞ்சாவூர் - ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களையும், நில அளவு முடிந்து பணிகள் தொடங்கப்பட்ட மன்னார்குடி-பட்டுக்கோட்டை ரயில் திட்டத்தையும் உடனடியாக தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

