பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்துநகை, பணம் திருட்டு

கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :14 மே 2018, 10:37 pm

கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் மருதமுத்து நகரை சேர்ந்த கோபால் மகன் ராஜேந்திரன் (44). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 11 ஆம் தேதி ராஜேந்திரன் தனது பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். இவரது மனைவியும், மகனும் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
இந்நிலையில், ராஜேந்திரன் திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் பணம், 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.