திருவையாறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 29-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: திருவையாறு வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

மே மாத எண்கணித பலன்கள் – 9

ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகம்! அட்டகாசமான அம்சங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

