பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு

கும்பகோணத்தில் குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:20 am

கும்பகோணத்தில் குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வாங்குவதற்கான சிறப்பு முகாமுக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:
குப்பைகளைத் தரம் பிரித்து எடுப்பது குறித்து கும்பகோணம் பகுதி பொதுமக்களிடம் நகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு பெண்களிடம் சென்றடைவதன் மூலம், வீடுகளிலேயே குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன.
எனவே, இந்த நிகழ்ச்சிக்குப் பெண்களை அழைத்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அதன் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பிரித்து கொடுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 
மக்காத குப்பையைத் தனித் தனியாகப் பிரித்து மறு சுழற்சிக்குப் பயன்படுகிறது. இதன்மூலம் குப்பைகளும் பயனுள்ள குப்பைகளாக மாற்றப்பட்டுள்ளது. 
எனவே, இத்திட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெறும். இதைக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் கையில்தான் உள்ளது என்றார் ஆணையர்.இதில் நகர்நல அலுவலர் பிரேமா, வருவாய் ஆய்வாளர் டேவிட் பாஸ்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.